நண்பரின் இறப்பை தாங்க முடியாமல் பேருந்து முன் விழுந்து தற்கொலை செய்து கொண்ட முதியவர்..!

திருப்பூரில் நண்பர் உயிரிழந்த சோகத்தில் இருந்த முதியவர் ஒருவர் பேருந்து முன் விழுந்து தற்கொலை செய்து கொண்ட காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. 75 வயது உடைய முதியவர் சுப்பிரமணி. இவர் தனது நண்பருடன் தினமும் காலையில் நடைப்பயிற்சி செய்வது வழக்கம்.

 

இந்நிலையில் கடந்த வாரம் நடைப் பயிற்சியுடன் வந்த நண்பர் மாரடைப்பால் எதிர்பாராத விதமாக உயிரிழந்துள்ளார். நண்பரின் இந்த மரணத்தால் அவர் கடும் சோகத்தில் இருந்து வந்துள்ளார்.

 

இந்த நிலையில் சுப்ரமணி இன்று காலை நடவு பெயர்ச்சி மேற்கொண்டிருந்த பொழுது அந்த வழியாக வந்து பேருந்து முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.