காதலை கைவிட மறுத்த மகளை கொலை செய்து விட்டு தானும் தற்கொலைக்கும் முயன்ற தாய்..!

நெல்லை மாவட்டம் பாலாமடையில் காதலை கைவிட மறுத்த மகளை கழுத்தை நெரித்து கொலை செய்த தாய் விஷம் அருந்தி தற்கொலைக்கும் முயன்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

கோவையில் நர்சிங் படித்து வந்த அருணா விடுமுறைக்கு சொந்த ஊர் வந்த நிலையில் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். தாய் ஆறுமுக கனியும் வாயில் நுரை தள்ளிய நிலையில் அருகில் கிடந்ததால் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

 

விசாரணையில் அருணா படித்து வந்த கல்லூரியில் ஒரு இளைஞரை காதலித்து வந்ததாக தகவல் தெரிய வந்துள்ளது. காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வேறு ஒருவருடன் திருமண ஏற்பாடு செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

காதலை கைவிட மறுத்ததால் அருணாவின் கழுத்தை நிறைத்து தாய் கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மகளை கொலை செய்துவிட்டு தாயின் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது.