--- --:--:-- --

பொருளாதார மந்த நிலையால் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை..!

2

உலகின் பெரிய பொருளாதார சொத்துகளாக விளங்கும் பல நாடுகள் உண்மையான பொருளாதார மந்த நிலையை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக உலக வர்த்தக அமைப்பின் தலைவர் எச்சரித்துள்ளார்.

 

இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் உலக வர்த்தக அமைப்பின் தலைவர் கலந்து கொண்டு பேசினார். அப்பொழுது உக்கிரன் போரால் உயர்ந்து வரும் உலோகம் மற்றும் எரிபொருளின் விலை அதிகரித்து வரும் பணவீக்கம் உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

 

இந்த பொருளாதார மந்த நிலை உலகம் முழுவதும் ஏற்படாது என்றாலும் பல நாடுகள் அதிகம் குறிப்பாக எரியும் பொருளாதார சக்திகளாக உள்ள நாடுகள் மிகப் பெரும் அளவிலான அந்த நிலையை எதிர்கொள்ளக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.

 

அதனால் பணவீக்கம் அதிகரித்து சர்வதேச அளவில் பல நெருக்கடிகளை உருவாக்கும் என்று அவர் எச்சரித்தார். இருந்தபோதிலும் சமீபத்தில் இந்தோனேசியாவில் சீனா அதிபர், அமெரிக்க அதிபர் பைடன் இருவரும் சந்தித்து பேசியுள்ளனர்.

 

அதனால் அரசியல் வர்த்தகம் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை மாறி உலகம் மீண்டுவரு என்று எதிர்பார்ப்பு துணிவு உற்றதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon