ஆர்டெமிஸ் 1 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய நாசா..!
நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆர்டெமிஸ் 1 ராக்கெட்டை நாசா விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியுள்ளது. இந்த ராக்கெட்டை கடந்த ஆகஸ்ட் மாதமே விண்ணில் செலுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இருமுறை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் ஆர்டெமிஸ் 1 ராக்கெட் புறப்பட்டது. நொடிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் இந்த ராக்கெட் 42 நாட்களில் சுமார் 13 லட்சம் மேல் பயணிக்க உள்ளது. இதில் மனிதர்களைப் போன்ற மூன்று உருவங்கள் வைக்கப்பட்டுள்ளன.
விண்கலம் நிலவை சுற்றிவிட்டு மூன்று வாரங்களுக்கு பிறகு பசுபிக் பெருங்கடலில் தரை இறங்கும்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





