சீர்காழி, மயிலாடுதுறை, கடலூரில் இன்று ஸ்டாலின் ஆய்வு..!
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொள்கிறார். பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் கொளத்தூரில் நடைபெறும் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்கிறார்.
குறிப்பாக ஸ்டீபன்சன் சாலை, வல்லவன் சாலை இடங்களில் வயலில் மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் ஆய்வு செய்தார். பின்னர் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முதலமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர் எவ்வளவு மழை பெய்தாலும் அதை எதிர் கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சீர்காழி, மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்ய உள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





