--- --:--:-- --

130 கிலோமீட்டர் வேகத்தில் ரயில் இயக்கப்படும்..!

7

பெங்களூரிலிருந்து புறப்பட்ட தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தது. இந்தியாவின் ஐந்தாவது வந்தே பாரத் ரகசியம் சேவையை பெங்களூரில் இருந்து காலை 10 மணிக்கு பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

 

75 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் மாலை 5 மணி அளவில் சென்னை சென்ட்ரல் வந்தடைந்தது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தெற்கு ரயில்வே பொது மேலாளர் தண்டவாள தடுப்பு வேலைகள் இல்லாத காரணத்தால் வந்தே பாரத் ரயில் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டதாகவும் மார்ச், மே மாதத்திற்குள் இடர்பாடுகள் செய்யப்பட்டு 130 கிலோமீட்டர் வேகத்தில் ரயில் இயக்கப்படும் என தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon