--- --:--:-- --

பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகை..!

6

பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் உள்ளிட்ட நான்கு தென் மாநிலங்களில் இன்றும் நாளையும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இரண்டு நாள் பயணமாக இன்று முதல் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

 

இன்று காலை பெங்களூரு – சென்னை இடையிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பெங்களூரில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதைத்தொடர்ந்து பெங்களூருவில் கெம்பிகவுடா சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது நிலையத்தையும் 108 அடி உயர சிலையையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

 

இன்று மாலை கர்நாடகாவில் இருந்து மதுரை விமான நிலையம் வரும் பிரதமர் மோடிதிண்டுக்கல் காந்திகிராம் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். இதையடுத்து நாளை நவம்பர் 12ஆம் தேதி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டில் தொடங்கி வைக்கிறார்.

 

பின்னர் நாளை மாலை தெலுங்கானா மாநிலம் செல்லும் அவர் ராமகுண்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். மொத்தம் 25000 கோடி மதிப்பில் ஆன திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி விரைந்து திட்டங்களை நாட்டிற்கு அர்பணிக்க உள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon