--- --:--:-- --

சின்னத்திரை துணை நடிகைக்கு பாலியல் தொல்லை அளித்த நபர்..!

4

சென்னையில் சின்னத்திரை துணை நடிகையை மது அருந்த செய்து பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தலைமறைவாக இருந்த நபரை போலீசார் கைது செய்தனர். கொளத்தூரை சேர்ந்த 22 வயது துணை நடிகை ஒருவருக்கு காசிநாதன் என்று ஒலிப்பதிவாளர் உடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.

 

தொலைக்காட்சி தொடரில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி அந்த பெண்ணை இரவில் வளசரவாக்கத்தில் உள்ள தனது நண்பரின் வீட்டிற்கு அழைத்து சென்ற காசிநாதன் அங்கு அவரை மது அருந்த செய்து பின் நண்பருடன் சேர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

 

அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் காசிநாதனை சிறையில் அடைத்த போலீசார் தலைமறைவாக இருந்த மற்றொரு நபரையும் தற்பொழுது கைது செய்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon