--- --:--:-- --

குன்னூரில் கேம்பூரி சாரண பெரும் திரளணி விழா : மேற்கு மண்டல அளவில் திருப்பூர் மாவட்ட சாரண சாரணியினர் இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை

campuri 1

????????????????????????????????????

மாநில அளவில் அல்லது மண்டல அளவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கேம்பூரி சாரண பெரும் திரளணி விழா 3 நாட்கள் குன்னூர், ஓட்டுபட்டறை, ஸ்டான்லி பார்க் பகுதியில் உள்ள மாநில சாரண பயிற்சி மையத்தில் நடந்தது. மேற்கு மண்டல அளவில் நடந்த இப்போட்டியில் திருப்பூர், கரூர், ஈரோடு, கோவை நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் இருந்து 300 சாரணகள் மற்றும் 300 சாரணியர் 60 சாரண ஆசிரியர், ஆசிரியைகள் 40 தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

 

தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேம்பூரி நிகழ்ச்சியை துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார். இதில் அமைச்சர்கள், தமிழக சாரண துறை உயர் அதிகாரிகள், மாவட்ட கலெக்டர் உள்பட உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

உடற்பயிற்சி …

திருப்பூரின் மாவட்ட சாரண சாரணிய உதவி ஆணையரும், ஒருங்கிணைப்பாளருமான ராஜாராம், கண்டின்ஜெண்ட் லீடர் தன்சிங் மாவட்ட தலைவர் நாராயணமூர்த்தி, கேம்பூரி ராணிகள் என்னும் சாரணியர்களுக்கு சாரண ஆசிரியைகள் மகாலட்சுமி, உமா மகேஸ்வரி, சாமுண்டீஸ்வரி, தமிழரசி ஆகியோரும், கேம்பூரி ராஜாக்கள் என்னும் சாரணர்களுக்கு சாரண ஆசிரியர்கள் ஜெயக்குமார், மணிகண்டன், காளிமுத்து ஆகியோர் பயிற்சி அளித்தனர், இவர்களுக்கு திருப்பூரில் விவேகா பள்ளி நிறுவனர் மற்றும் தாளாளர் பிரகாஷ், நித்யா ஆகியோர் அப்பள்ளியில் இடம் கொடுத்து மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர். மாணவர்களுக்கு அந்தந்த பள்ளியில் பயிற்சி அளிக்கப்பட்டது.

 

திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், பல்லடம், உடுமலை, அவிநாசி உள்பட பல்வேறு பகுதியில் இருந்து அரசு மற்றும் தனியார் பள்ளியை சேர்ந்த 50 சாரணர்கள், 50 சாரணியர்கள், 12 சாரண ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். திருப்பூர் மாவட்ட சாரண, சாரணியர்கள் பல்வேறு சாகச போட்டிகளான உணவு திருவிழா, பொருட்காட்சி, அணிவகுப்பு, கயிற்றுக் கலை, கலை நிகழ்ச்சி, சிலம்பம், கராத்தே போன்ற போட்டியில் கலந்து கொண்டு தங்களது திறனை வெளிப்படுத்தினர்.

கிராமிய நடன போட்டி

இறுதி போட்டிகளில் பேண்ட் பார்ட்டி, மற்றும் கயிற்றுக் கலை போட்டிகளில் சாரணர், சாரணியர் தனித்தனியாக முதலிடத்தையும், பிசிகல் டிஸ்பிளே என்னும் உடற்பயிற்சிகள், கேம்ப் பயர், பொருட்காட்சி, கிராமிய நடனம் ஆகிய போட்டிகளில் சாரணியர் அணி முதலிடத்தையும் பிடித்து சாதனை படைத்தனர்.

 

அதேபோல், உணவு திருவிழா, அணிவகுப்பு போட்டி மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் பெருமைகளான அவிநாசி தேர், பூண்டி சிற்பங்கள், அனுப்பர்பாளையம் பாத்திரம், உலகத்துக்கே உடை தரும் பனியன் தொழில், திருப்பூர் கொடிகாத்த குமரன், காதர் பேட்டை செகண்ட் சேல்ஸ் பஜார், ஆங்கிலேயர் காலத்தின் புகழ் பிஷப் ஸ்கூல், ஆசியாவிலேயே அதிக மாணவிகள் படித்து வரும் ஜெய்வாபாய் பெண்கள் பள்ளி, அகண்ட மைதான மான நஞ்சப்பா பள்ளி ஆகியவற்றை பெருமைப்படுத்தி அதற்கான செயல்விளக்க படங்களுடன் கூடிய பாடலுக்கு நடனம் ஆடி வந்த பேஜண்ட் என்னும் ஊர்வல நடனம் ஆகிய போட்டிகளில் சாரணர், சாரணியர் தனித்தனியாக இரண்டாம் இடத்தை பிடித்தனர்.

அதேபோல் கிராமிய நடன போட்டி, தனித்திறமை போட்டி, கேம்ப் பயர் ஆகிய போட்டிகளில் சாரணர் அணி இரண்டாம் இடத்தையும் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். மாநில அளவில் இதுவரை ஓரிரு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று வந்த நிலையில் திருப்பூர் மாவட்ட சாரண சாரணி அணியினர் 7 போட்டிகளில் முதல் இடத்தையும், 8 போட்டிகளில் இரண்டாம் இடத்தையும் பிடித்து மேற்கு மண்டல அளவில் இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை படைத்தது திருப்பூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon