--- --:--:-- --

தன்னை கடித்த பாம்பை கடித்த சிறுவன்..!

9

சத்தீஷ்கர் மாநிலத்தில் தன்னை கடித்த பாம்பை 12 வயது சிறுவன் கடித்ததில் பாம்பு உயிரிழந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பத்திரகாத்து கிராமத்தில் வசிக்கும் பழங்குடியினத்தை சேர்ந்த 12 வயது சிறுவன் தீபக் விளையாடிக்கொண்டிருந்த பொழுது பாம்பு ஒன்று கடித்துள்ளது.

 

கோபத்தில் சிறுவன் திருப்பி பாம்பை கடித்த நிலையில் கடிபட்ட பாம்பு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனடியாக தீபக்கிற்கு விஷ முறிவு ஊசி செலுத்தப்பட்டு தற்பொழுது அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon