சத்யஸ்ரீ கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக சம்பவத்தை நேரில் பார்த்த மாணவியின் வாக்குமூலம்..!
சென்னையில் ரயில் முன் தள்ளி மாணவி சத்யஸ்ரீ கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக சம்பவத்தை நேரில் பார்த்த மாணவியரின் தோழிகளிடம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ரகசிய ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டது.
கடந்த 13ஆம் தேதி மாணவி சத்திய ஸ்ரீ பரங்கிமலை ரயில் நிலையத்தில் சதீஷ் என்பவரால் ரயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்டார். அப்பொழுது மாணவியுடன் இருந்த நான்கு சக மாணவிகளிடம் ஏற்கனவே போலீசார் விசாரணை நடத்திய நிலையில் அவர்களிடம் ரகசிய ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





