விராட் கோலியின் ஹோட்டல் அறை வீடியோவை வெளியிட்ட ஊழியர்கள் பணியிடை நீக்கம்..!

விராட் கோலியின் ஹோட்டல் அறை வீடியோவை வெளியிட்ட ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக ஹோட்டல் நிர்வாகம் அறிவித்துள்ளது. முன்னணி கிரிக்கெட் வீரரான விராட் கோலி டி 20 உலகக்கோப்பை தொடரில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

 

இந்த நிலையில் விராட் கோலி தங்கியிருந்த ஹோட்டல் அறைக்குள் நுழைந்த ரசிகர்கள் சிலர் அதனை வீடியோவாக எடுத்து இணையதளத்தில் பகிர்ந்துள்ளனர். அதன் காரணமாக ஆவேசமடைந்த அவர் விராட் கோலி பிரைவசிக்கு மதிப்பு அளியுங்கள் எனக்கூறி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

 

இதனால் ஹோட்டல் அறையின் வெளியே தனக்கு பிரைவசி இல்லை என்றால் தான் வேறு எங்கு எதிர்பார்க்க முடியும் என தெரிவித்து இருக்கிறார். மேலும் தங்களை பொழுதுபோக்கு பொருளாக மட்டும் பார்க்காதீர்கள் என உருக்கமான பதிவை இணையதளத்தில் பதிவிட்டு இருந்தார்.

 

இந்த நிலையில் விராட் கோலி வெளியான வீடியோ வெளியான விவகாரத்தில் ஹோட்டல் அன்பாக மன்னிப்பு கோரி உள்ளது. மேலும் வீடியோவை வெளியிட்ட ஊழியர்களையும் நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது.