பிரதமர் மோடியின் காரில் குஜராத் முதலமைச்சரை ஏறவிடாமல் மறுத்த சம்பவம்..!
பிரதமர் மோடியின் குஜராத் சுற்றுப் பயணத்தின் பொழுது அந்த மாநில முதலமைச்சர் பூபேந்திர பாட்டில் நடத்தப்பட்ட விதம் சமூக வலைதளங்களில் பெரும் விவாத பொருளாகியுள்ளது. குஜராத் மாநிலத்தில் விரைந்து சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.
அந்த மாநிலத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்ட பணிகளை அறிவித்திருந்தார். இந்நிலையில் பிரதமர் மோடியின் கார் குஜராத் முதல்வர் ஏறுவதற்கு முன் புறப்பட்டுவிட்டது.
அப்போது குஜராத் முதல்வரை தேசியப் படையை சேர்ந்த நபர் ஒருவர் தடுத்து நிறுத்தினார். இதையடுத்து பாதுகாப்பு வீரர்களோடு சேர்ந்து குஜராத் முதலமைச்சரும் நடந்தே சென்றார். இந்த வீடியோவை வெளியிட்டு காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





