தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு..!
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கின்றது. திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டிருக்கிறது.
சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





