ஏழாவது அடுக்குமாடியில் கம்பிகளுக்கு நடுவே சிக்கிக்கொண்ட குழந்தை..!
சீனாவில் ஏழாவது அடுக்குமாடியில் கம்பிகளுக்கு நடுவே சிக்கிக்கொண்ட குழந்தையை இளைஞர் ஒருவர் காப்பாற்றிய வீடியோ வைரலாகியுள்ளது. சீனாவின் அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது தளத்தில் உள்ள வீட்டின் முன்புறம் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென அங்கிருந்த கம்பிகளுக்குள் சிக்கி கொண்டது.
தலைமட்டும் சிக்கிக்கொண்ட குழந்தை அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. இதனை பார்த்த இளைஞர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு குழந்தையை காப்பாற்றினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் குழந்தையை காப்பாற்றிய இளைஞருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





