சாலையின் நடுவே உள்ள நிழற்குடையை அகற்ற கோரிக்கை..!

டலூரில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் நடுவே உள்ள நிழற்குடையை அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது. கடலூரில் இருந்து சேலம் வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று உள்ளது. போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கடைகள் வீடுகள் அகற்றப்பட்டன.

 

விளாங்காட்டூர் பேருந்தில் இருந்த பயணிகள் நிழற்குடைகள் இன்னும் அகற்றப்படாமல் இருப்பதால் இரவு நேரத்தில் விபத்து நேரிட வாய்ப்பு உள்ளதாக அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

 

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் கேட்டதற்கு பயணிகள் நிழற்குடையை அகற்ற ஊராட்சி ஒன்றியத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்துள்ளார்.