பைக்கில் லிப்ட் கொடுத்தவர் விஷ ஊசி போட்டு கொல்லப்பட்ட சம்பவம்..!

தெலுங்கானாவில் பைக்கில் லிப்ட் கொடுத்தவர் விஷ ஊசி போட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜான்சன். 55 வயதாகும் அவர் தனது மகள் வீட்டிற்கு பைக்கில் சென்றபோது மர்ம நபர் ஒருவர் லிப்ட் கேட்டு உள்ளார்.

 

அவர் பைக்கில் ஏற்றி இருக்கிறார். சில தூரம் சென்றதும் மர்ம நபர் தான் வைத்திருந்த விஷ ஊசியை ஜமால் உடலில் செலுத்தி இருக்கிறார். ஜமால் உணர்வதற்குள் மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடியிருக்கிறார்.

 

உதவி கோரிய ஜமால் அங்கிருந்தவர்கள் அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தெலுங்கானாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.