சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி எப்போது திறப்பு..!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட கணியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் அனுமதியுடன் இங்கு சீரமைப்பு பணிகளை தொடங்கியுள்ளது.
மாவட்ட நிர்வாகத்தால் நியமிக்கப்பட்டுள்ள தனியார் மற்றும் காவல் துறையினர் முன்னிலையில் சீரமைப்பு பணி தொடங்கியது. 45 நாட்களுக்குள் மறு சீரமைப்பு பணியை முடிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
சீரமைப்பு பணி முடிந்து பள்ளியில் உட்கட்டமைப்பு வசதிகள் ஆய்வு செய்யப்பட்ட பின் பள்ளிகள் திறக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





