டி செட் சார்பில் மாணவ, மாணவிகளுக்குக்கான 27 வது நிட்சிட்டி கைப்பந்து போட்டிகள் : சீனியர், சூப்பர் சீனியர் போட்டியில் 3 கோப்பைகளை வித்ய விகாஷினி பள்ளி அணி கைப்பற்றி சாதனை..!

திருப்பூர் விளையாட்டு மற்றும் கல்வி அறக்கட்டளை (டி செட்) சார்பில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான 27 வது நிட்சிட்டி கைப்பந்து போட்டிகள் திருப்பூர் சிறுபூலுவப்பட்டியில் உள்ள டீ செட் விளையாட்டு மைதானத்தில் இரண்டு நாட்கள் நடந்தது. போட்டியில் மாணவர்களுக்கு சீனியா மற்றும் சூப்பர் சீனியர்., மாணவிகளுக்கு சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் ஆகிய பிரிவுகளில் நடத்தப்பட்டது. இப்போட்டியில் திருப்பூர் சுற்று பகுதியை சேர்ந்த 23 பள்ளிகளை சேர்ந்த 50 அணிகள் கலந்து கொண்டன.

 

நேற்று நடந்த மாணவர்களுக்கான சீனியர் பிரிவு இறுதிப் போட்டியில் வித்ய விகாஷினி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 27 – 25, 25 – 17 புள்ளிகள் எடுத்து 2-0 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றது. இதன் மூலம் வித்யா விகாஷினி பள்ளி முதலிடமும், பிரண்ட் லைன் பள்ளி 2 ம் இடமும், கே எஸ் சி அரசு பள்ளி 3-ம் இடமும், நஞ்சப்பா அரசு பள்ளி 4ம் இடமும் பெற்றன.

 

மாணவர்களுக்கான சூப்பர் சீனியர் போட்டியில் வேலவன் பள்ளி பெருமாநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி அணியை 2-0 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றது. இதன் மூலம் வேலவன் பள்ளி முதலிடத்தையும், பெருமாநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி 2ம் இடமும், பிரண்ட்லைன் பள்ளி 3-ம் இடமும், பூண்டி ஏவிபி பள்ளி 4ம் இடத்தையும் பெற்றன.

 

அதேபோல் மாணவிகளுக்கான சீனியர் பிரிவில் வித்ய விகாஷினி பள்ளி செயின்ட் ஜோசப் பள்ளி அணியை 2 – 0 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றது. இதன் மூலம் வித்ய விகாஷினி பள்ளி அணி முதல் இடத்தையும், செயின்ட் ஜோசப் பள்ளி 2 ம் இடத்தையும், இன்பேன்ட் ஜீசஸ் பள்ளி 3 ம் இடத்தையும், லிட்டில் கிங்டம் பள்ளி 4 ம் இடத்தையும் பெற்றது.

அதே போல் மாணவிகளுக்கான சூப்பர் சீனியர் பிரிவில் வித்ய விகாஷினி பள்ளி வேலவன் பள்ளி அணியை 2 – 1 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் வித்ய விகாஷினி பள்ளி முதல் இடத்தையும், வேலவன் பள்ளி 2 ம் இடத்தையும், ஜெய்வாபாய் பள்ளி 3 ம் இடத்தையும், பூண்டி ஏ.வி.பி பள்ளி 4 ம் இடத்தையும் பெற்றது.

 

இதனை தொடர்ந்து பரிசளிப்பு விழா நடந்தது. விழாவில் திருப்பூர் விளையாட்டு மற்றும் கல்வி அறக்கட்டளை தலைவர் நிக்கான்ஸ் வேலுச்சாமி தலைமை தாங்கி வரவேற்றார். துணைத் தலைவர் காந்திராஜன் வாழ்த்தி பேசினார்.

 

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு மாநில கைப்பந்து கழக துணைத் தலைவரும், திருப்பூர் மாவட்ட கைப்பந்து கழக தலைவருமான வி.ரங்கசாமி வெற்றி பெற்ற அணிகளுக்கு சான்றிதழ் மற்றும் கோப்பைகள் வழங்கினார். முடிவில் டி செட் செயலாளர் துரைசாமி நன்றி கூறினார்.

 

நிகழ்ச்சியில் வித்ய விகாஷினி பள்ளி அணியின் பெஸ்ட் அட்டாக்கராக மாணவர் ஸ்ரீ விஷ்ணு மற்றும் பெஸ்ட் ஷட்டராக மாணவி அபிநந்தனா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு ஓய்வு பெற்ற போலீஸ் துணை சூப்பரின்டென்டென்ட் மயில்சாமி தலா ரூ.ஆயிரம் மற்றும் டி செட் அலுவலர்கள் சார்பில் தலா ரூ 2 ஆயிரம் ரொக்க பரிசாக வழங்கப்பட்டது. விழாவினை ஓய்வு பெற்ற ஆசிரியர் பழனிசாமி தொகுத்து வழங்கினார்.