--- --:--:-- --

ஹேர் ஸ்டைலை பார்த்து மயங்கி விழுந்த குரங்கு..!

8

னிதனின் ஹேர் ஸ்டைலை பார்த்து மயங்கி விழுந்த குரங்கின் வீடியோ நெட்டிசன்களை கவர்ந்து வருகிறது. விலங்குகளின் சுட்டித் தனங்களை பார்த்து நாமும் குழந்தைகள் போல் ரசித்து மகிழ்வோம். அதிலும் குழந்தையின் சேட்டைகளை கண்டு நமது மனமும் கண்களும் மிகுந்த ஆனந்தம் அடையும்.

 

அப்படி ஒரு ஆனந்தத்தை பெறுவதற்காக சுற்றுலாத்தலங்களில் குரங்குகள் நிறைந்த பகுதிக்கு சென்று அவற்றின் செயல்களை கண்டு களித்து உற்சாகம் அடைவோம்.

 

அந்த வகையில் இன்ஸ்டாவில் வெளியிடப்பட்டுள்ள ஒரு வீடியோவில் இடம்பெற்றுள்ள குரங்கின் வேடிக்கையான செயல் காண்போரை மெய் மறந்து சிரிக்க வைத்து வருகிறது. மனிதனின் ஹேர்ஸ்டைல் அழகை பார்த்து மயங்கி சாய்வது போல சரிந்து விழுந்த குரங்கின் செயலால் அதன் அருகில் உள்ள நபரே ஒரு நிமிடம் தான் அவமதிக்கப்பட்டு இருப்பது போல் உணர்ந்திருப்பார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon