பெற்ற மகளிடமே அத்துமீறி கர்ப்பமாக்கிய தந்தை..!
புதுக்கோட்டை அருகே பெற்ற மகளிடம் அத்துமீறி கர்ப்பமாக்கிய தந்தை சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது. புதுக்கோட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 43 வயதான நபர் 16 வயதான மகளிடம் கடந்த 2020ல் நடந்த இந்த சம்பவத்தில் சிறுமியின் கர்ப்பமடைந்தார்.
ஆனால் குடும்ப மானம் போய்விடும் என்பதால் வேறு ஒருவரை கூறுமாறு மகளை மிரட்டி இருக்கிறார். இருந்தபோதிலும் நீதிபதி முன்பாக தன் தந்தையை காரணம் எனக் கூறியிருக்கிறார்.
அதேநேரம் சிறுமிக்கு பிரசவத்தின் பொழுது குழந்தை இறந்தே பிறந்தது முதல் ஆறு மாதம் வழக்கை விசாரித்து புதுக்கோட்டை மகிலா நீதிமன்ற நீதிபதி சிறுமியின் தந்தைக்கு ஆயுள் தண்டனை மற்றும் 5 லட்சத்து பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும் 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு உத்தரவிடப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





