--- --:--:-- --

நடிகை சோனாலி மரண வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க கோவா அரசு முடிவு..!

8

டிகை சோனாலி மரண வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க கோவா அரசு முடிவு செய்துள்ளது. கோவாவை சேர்ந்த சோனாலி கடந்த 23ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். போதை மருந்து கலந்த பானத்தை அவருக்கு வழங்கிய உதவியாளர்கள் இருவர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர் .

 

சோனாலி மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு அவரது குடும்பத்தினரும், ஹரியானா முதலமைச்சரும் வலியுறுத்தி இருந்தனர். இதை ஏற்று சிபிஐயிடம் வழக்கை ஒப்படைக்க கோவா அரசு முடிவு செய்துள்ளது. சிபிஐயிடம் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கோவா முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon