ஜி.வி.பிரகாஷ் நடித்த பென்சில் பட இயக்குனர் திடீர் மரணம்..!
ஜி.வி.பிரகாஷை வைத்து பென்சில் என்ற படத்தை இயக்கிய இயக்குனர் மணி நாகராஜ் உயிரிழந்துள்ளார். அவர் இறந்ததற்கான காரணம் எதுவும் தெரியவில்லை. ஜி.வி.பிரகாஷ் நாயகனாக கலக்கிய படங்களில் ஒன்று பென்சில்.
அப்படத்திற்கு பிறகு அவர் வாசுவின் கர்பிணிகள் என்ற படத்தை இயக்கி வந்துள்ளார். இதில் நீயா நானா கோபிநாத், அனிகா சுரேந்திரன், வனிதா விஜயகுதார், சீதா போன்ற பிரபலங்கள் நடித்து வந்துள்ளனர். அடுத்த வருடம் இப்படம் ரிலீஸ் ஆவதாக கூறப்படுகிறது.
இந்த நேரத்தில் தான் மணி நாகராஜ் அவர்களின் மரண செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




