--- --:--:-- --

கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நபர்..!

3

கேரள மாநிலம் பாலக்காட்டில் ரயில் பெட்டியின் கழிவறையில் சேலத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கேரள மாநிலம் சோலன் ஊரில் இருந்து கோவை செல்லும் ரயில் நிலையம் அருகே சென்றபோது பயணி ஒருவர் கழிவறைக்கு சென்றுள்ளார்.

 

கழிவறையின் கதவை திறந்த போது 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் தூக்கிட்டு தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். தகவலறிந்து வந்த ரயில்வே பாதுகாப்பு படையினர் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

விசாரணையில் தற்கொலை செய்து கொண்டவர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த ராஜா என்பது தெரியவந்தது. இதனால் ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon