கிறிஸ்தவ தேவாலயத்தில் இருந்து வெள்ளி கிரீடம் திருட்டு..!
தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் அருகே கிறிஸ்தவ தேவாலயத்தில் இருந்து சொரூபத்தில் வெள்ளி கிரீடம் திருடப்பட்டுள்ளது. பழமையான இந்த கோயிலில் கண்ணாடியை உடைத்து திருடப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
செப்டம்பர் மாதம் கோயில் திருவிழா நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் கிரீடம் திருடப்பட்டு இருப்பது அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





