--- --:--:-- --

ஆசிரியை தாக்கியதில் உயிரிழந்த 9 வயது சிறுவனின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணம்..!

3

ராஜஸ்தானில் ஆசிரியை தாக்கியதில் உயிரிழந்த 9 வயது பட்டியலின சிறுவனின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என மாநில முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். கிராமத்தில் கடந்த ஜூலை 20-ஆம் தேதி இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

ஆசிரியர் குடிப்பதற்காக வைக்கப்பட்ட பாட்டிலில் தண்ணீர் குடித்ததற்காக பட்டியலினத்தை சேர்ந்த மாணவனை ஆசிரியர் அடித்துள்ளார். இதில் கண் மற்றும் காதில் காயமடைந்த மாணவர் சிகிச்சையின் போது உயிரிழந்தார். உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு எஸ்சி, எஸ்டி சட்டம் மற்றும் முதலமைச்சர் நிவாரண நிதியின் கீழ் நிதி வழங்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

மாநில காங்கிரஸ் கமிட்டி சிறுவனின் குடும்பத்திற்கு 7 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon