கல்லூரி பேருந்து மோதியதில் ஐந்தாம் வகுப்பு மாணவன் சம்பவ இடத்திலேயே பலி..!
ராசிபுரம் அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் ஐந்தாம் வகுப்பு மாணவன் சம்பவ இடத்திலேயே பலியானார். நாமக்கல் மாவட்டம் சீனிவாசன் மகன் பிரபாகரன் தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தான். பேருந்து நிலையத்தில் மாணவன் காத்திருந்தார்.
அப்பொழுது அந்த வழியாக வந்த தனியார் கல்லூரி பேருந்து நிலைதடுமாறி மோதியதில் மாணவர் உயிரிழந்தார். இந்த விபத்தில் சிக்கி மாடு ஒன்று பலியானது. கல்லூரி பேருந்தில் வந்த இரண்டு மாணவிகளும் காயமடைந்தனர். இந்த விபத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





