தாய் மடியில் இருந்து தவறி விழுந்த ஏழு மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!
திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது தாய் மடியில் இருந்து தவறி விழுந்த ஏழு மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. கீழச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் குணா-முத்தமிழ் தம்பதிக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 7 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.
இந் நிலையில் கடந்த மாதம் 24ஆம் தேதி ஒரு பள்ளியில் குரூப்-4 தேர்வு எழுதி கணவர் மற்றும் குழந்தையுடன் பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது பேரம்பாக்கம் கோயில் வெளியே செல்லும் போது நிலைதடுமாறி அனைவரும் கீழே விழுந்ததில் 7 மாத குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





