காதல் விவகாரத்தில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் உயிரிழப்பு..!
கர்நாடகாவில் காதல் விவகாரத்தில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் உயிரிழந்ததை அடுத்து சம்பவம் நடந்த இடத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் கொப்பால் மாவட்டத்தில் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இருவர் காதலித்து வந்துள்ளனர்.
இதனால் இருவருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. காதல் விவகாரத்தில் இந்த சம்பவத்தில் 2 பேர் பலியாகினர். ஆறு பேர் படுகாயமடைந்தனர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து மோதல் ஏற்பட்டதை அடுத்து அந்த கிராமத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





