கால்பந்து மைதானத்தின் வழியாக சென்ற ரயில் வீடியோ வைரல்..!
கால்பந்து மைதானத்தின் வழியாக சென்ற ரயில் வீடியோ அனைவரையும் ஆச்சரியத்தில் பயணிக்க வைத்துள்ளது. ஒரு கால்பந்தாட்ட மைதானத்தின் வழியில் செல்லும் வகையில் ஒரு குறுகிய ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
அதிலுள்ள பார்வையாளர்கள் தங்கள் இருக்கையில் அமர்ந்து கால்பந்து ஆட்டத்தை ரசித்துக் கொண்டிருக்கும் போது மைதானத்தில் ஓரமாக நீராவி ரயில் செல்வதை பார்த்து மகிழ்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கால்பந்தாட்ட வீரர்களின் ஒவ்வொரு அசைவையும் பார்த்து ரசிகர்கள் வந்த நிலையில் அப்பொழுது சிறு குறுக்கீடு வந்தாலும் வீரர்களை விட ஆவேசமடைவர் ரசிகர்கள். அப்படிப்பட்ட நிலையில் கால்பந்தாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது மைதானத்தின் ஓரமாக அமைக்கப்பட்டுள்ள பாதையில் ரயில் புகுந்து ரசிகர்களை உற்சாகம் அடைய செய்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





