ஆசிரியைக்கு மாணவன் மசாஜ் செய்த வீடியோ வைரல்..!
சமீப நாட்களாக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் அவலநிலை குறித்து செய்திகள் உலா வருகிறது. இந்த நிலையில் அரசு ஆரம்பப் பள்ளி ஒன்றில் மாணவரை ஆசிரியர் ஒருவர் மசாஜ் செய்ய வைத்த வீடியோ வைரலாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஆரம்பப்பள்ளி ஆசிரியை ஒருவர் மாணவனிடம் மசாஜ் செய்யும்படி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. அந்த ஆசிரியை பின் அடையாளம் காட்டப்பட்டது. அந்த ஆசிரியை நாற்காலியில் உட்கார்ந்திருக்க அந்த மாணவன் ஆசிரியைக்கு மசாஜ் செய்து விடுகிறான்.
பாடம் எடுப்பதற்கு பதிலாக வகுப்பறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார் அந்த ஆசிரியர். இந்த வீடியோ வெளியானதையடுத்து ஆசிரியை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மாவட்ட கல்வி அதிகாரி தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




