--- --:--:-- --

கடல் அலையில் சிக்கி காணாமல் போன இரண்டு மாணவர்..!

1

புதுச்சேரியில் கடல் அலையில் சிக்கி காணாமல் போன இரண்டு மாணவர்களை கடலோர காவல் படையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள். மங்கலம் கிராமத்தை சேர்ந்த சபரிநாதன் மற்றும் ஹரிஷ் என்ற 17 வயது மாணவர்கள் கடலில் குளிக்க சென்றுள்ளனர்.

 

இருவரும் கடலில் இறங்கிய நிலையில் மற்ற இருவரும் தரையில் அமர்ந்து கொண்டனர். வழக்கத்தைவிட அதிக சீற்றத்துடன் காணப்பட்டதால் இரு மாணவர்களும் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டனர்.

 

இதனை கண்ட சக நண்பர்கள் கூச்சலிட அங்கிருந்த பாதுகாப்பு வீரர்கள் மற்றும் கடலில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் இருவரையும் காப்பாற்ற முயற்சித்தனர். கலவர காவல்படை மீனவர்கள் 5 மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon