--- --:--:-- --

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது சிறுமி..!

2

குஜராத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது சிறுமியை ராணுவ வீரர்கள் உயிருடன் மீட்டனர். சுரேந்தர் நகர் மாவட்டத்தில் 14 அடி ஆழத்திற்கு ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டிருந்தது.

 

மூடப்படாமல் குழாய் மட்டுமே பதிக்கப்பட்டிருந்த இந்த ஆழ்துளை கிணற்றுக்குள் அந்த வழியாக சென்ற 12 வயது சிறுமியை தவறி விழுந்ததால் பெற்றோர் மிகுந்த அச்சம் அடைந்தனர். தகவல் அறிந்த மாவட்ட நிர்வாக அதிகாரிகள் இராணுவத்தை அழைக்க அவர்கள் விரைந்து வந்து குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

 

சுமார் 60 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சிறுமியை பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். குழந்தையின் முக்கிய உறுப்புகள் அனைத்தும் சிறப்பாக செயல்படுவதாகவும் உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon