ராதிகா உதடு வீங்கி இருக்கு.. என்ன காரணம்..?
நடிகை ரேஷ்மாவின் உதடு பற்றி வந்த கமெண்ட்டை குறிப்பிட்டு மோசமாக கலாய்த்து தள்ளி இருக்கிறார் ராஜு.விஜய் டிவியில் தற்போது ராஜு வூட்ல பார்ட்டி என்ற புது ஷோ தொடங்கப்பட்டு இருக்கிறது. அதை பிக் பாஸ் புகழ் ராஜு தான் நடத்தி வருகிறார்.
இந்த நிகழ்ச்சியின் லேட்டஸ்ட் ப்ரோமோ வெளிவந்து இருக்கிறது. அதில் பாக்கியலட்சுமி சீரியல் ராதிகாவாக நடித்து வரும் ரேஷ்மாவும் பங்கேற்றார்.அந்த தொடர் பற்றி வரும் விமர்சனங்களை ராஜு படித்து காட்டினார். “லிப்ஸ்டிக் போட்டு ராதிகா உதடு வீங்கிவிட்டது.. சகிக்கல” என ஒருவர் கமெண்ட் செய்ததாக ராஜு கூற, அதற்கு லிப்ஸ்டிக் காரணம் இல்லை என அவர் பதில் அளித்தார். “பிறகு.. கோபி எதாவது பண்ணாரா” என கிண்டலாக கேட்டார் ராஜு.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




