--- --:--:-- --

கல்லூரி மாணவர்கள் அரங்கேற்றிய முத்த விளையாட்டு..! மாணவன் கைது..!

7

கர்நாடகாவில் கல்லூரி மாணவர்கள் அரங்கேற்றிய முத்த விளையாட்டு இணையத்தில் வைரலாகிய நிலையில் மாணவிக்கு முத்தமிட்ட சக மாணவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

கர்நாடக மாநிலம் மங்களூருவில் புகழ்பெற்ற தனியார் கல்லூரி ஒன்றில் படிக்கும் சக மாணவ மாணவிகள் புதிதாக ஒரு விளையாட்டு போட்டியை நடத்தியுள்ளனர். அதன்படி போட்டியில் பங்கு பெற்றவர்களில் யார் தோற்றாலும் முத்தம் வழங்க வேண்டும் என்பது விதி.

 

இந்நிலையில் போட்டியில் கலந்து கொண்ட மாணவர் ஒருவர் சக மாணவி ஒருவருக்கு முத்தமிட்டுள்ளார். இதனை அங்கு உள்ள சக மாணவர் வீடியோவாக எடுத்து அது இணையத்தில் வைரல் ஆனது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டி சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

அந்த மாணவரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon