--- --:--:-- --

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று..!

6

 அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. தொற்று உறுதியான தொடர்ந்து அதிபர் ஜோ பைடன் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாக கூறப்பட்டுள்ளது.

 

தனிமைப்படுத்துதலில் இருந்தபடியே தனது அனைத்து பணிகளையும் மேற்கொள்வார் என அமெரிக்க அதிபர் அலுவலக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. தடுப்பூசியை முழுமையாக போட்டுக் கொண்டுள்ள பைடன் இரண்டு முறை பூஸ்டர் செலுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon