கழுத்தளவு நீரில் மூழ்கி சென்று குழந்தையை காப்பாற்றிய நபர்..!
தெலுங்கானாவில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல பகுதிகளில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் நபர் ஒருவர் தனது தலையில் பிளாஸ்டிக் தொட்டியில் மூன்று மாத ஆண் குழந்தையை வைத்து கழுத்தளவு நீரில் மூழ்கி செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.
நீரில் மூழ்கிய நிலையில் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அப்பொழுது கழுத்தளவு நீரில் மூழ்கியதில் மூன்று மாத ஆண் குழந்தையை ஒரு பிளாஸ்டிக் தொட்டியில் வைத்து தலை மீது வைத்து நீரில் பாதுகாப்பாக நடந்து செல்கிறார் ஒருவர்.
அவருடன் குழந்தையின் தாயை பிடித்தபடி மற்றொரு நபர் அவரை பத்திரமாக பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்கிறார். தாயும் குழந்தையும் தற்போது பாதுகாப்பாக உள்ளனர் எனவும் மேற்படி தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




