--- --:--:-- --

குறுக்கு வழியில் நடைபெறும் அரசியல் இன்றைய பெரும் சவாலாக இருக்கிறது..!

8

குறுக்கு வழியில் நடைபெறும் அரசியல் இன்றைய பெரும் சவாலாக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி எந்த ஒரு நாட்டின் அரசியலிலும் குறுக்கு வழியை பின்பற்றுவதாக இருக்க முடியாது என்றார்.

 

இப்போது பெரும் சவாலாக குறுக்குவழி அரசியல் இருப்பதாக கூறிய பிரதமர் இதனால் வாக்குகளை எளிதாகப் பெற்றுவிட முடியும் என்றாலும், அது சரியான வழி அல்ல என தெரிவித்தார்.

 

ஒரு நாட்டின் அரசியல் குறுக்கு வழியை நம்பி இருப்பதாக இருந்துவிட்டால் அது மின்சாரத் தாக்குதல் போன்று அபாயத்தில் தள்ளிவிடும் என மோடி பேசினார். எனவே அதிலிருந்து நான் தள்ளி இருக்க வேண்டியது அவசியம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon