திடீரென சாய்ந்த மரம்.! நொடிப்பொழுதில் உயிர் தப்பிய நபர்.!
கேரளாவில் திடீரென சாலையில் இருந்த ஒரு மரம் சாய்ந்து விழுந்த நிலையில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தென்மேற்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
தொடர் கனமழை மற்றும் காற்றின் காரணமாக அவ்வப்போது மரங்களும் வேரோடு சாய்ந்து வரும் நிலையில் வயநாடு பகுதியில் பெய்த கனமழையால் இன்று காலை திடீரென வேரோடு சாய்ந்தது. இதில் சாலையில் குடை பிடித்தபடி நடந்து சென்ற ஒருவர் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார். இதன் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





