இலங்கையில் ஜூலை 10 ஆம் தேதி வரை பள்ளி கல்லூரிகள் இயங்காது..!
இலங்கையில் இன்று முதல் ஜூலை 10ஆம் தேதி வரை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே எரிபொருட்கள் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நிலைமையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜூலை மாதம் பத்தாம் தேதி வரை கல்வி நிலையங்கள் இயங்காது என்றும் ஏனைய அனைத்து சேவைகளும் வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே மாகாணங்கள் இடையேயான போக்குவரத்து சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





