பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு..!
11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியாக உள்ளது. நடந்து முடிந்த பிளஸ் 1 தேர்வில் 8 லட்சத்து 83 ஆயிரத்து 882 பேர் பங்கேற்றனர். இதில் மாணவர்கள் 4 லட்சத்து 33 ஆயிரத்து 684 பேரும், மாணவிகள் 4 லட்சத்து 50 ஆயிரத்து 598 பேர் தேர்வு எழுதினர்.
தற்போது பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. இணையதள முகவரிகளில் வெளியிடப்படும் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தங்களுடைய பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து அறிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்தாலும் அவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை அடுத்த படியாக நடக்கும் சிறப்பு தேர்வில் அவர்கள் பதினோராம் வகுப்பில் தோல்வியடைந்த பாடங்களை எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





