--- --:--:-- --

நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் படுகாயம்..!

10

மாங்காடு அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்தார். காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அடுத்த பரங்கி புத்தூர் பகுதியில் 3 பேர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் கையில் வைத்திருந்த ஒரு பொருள் தவறிக் கீழே விழுந்து வெடித்து சிதறியது.

 

இதில் ஒருவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் அங்கிருந்து வேகமாக தப்பி சென்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்திய போது படுகாயமடைந்த அவர் ஐயப்பன்தாங்கலை சேர்ந்த குற்றவாளி என்பது தெரியவந்தது. போலீசார் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon