--- --:--:-- --

ஆடு மேய்த்த பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்..!

9

பர்கூர் அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண் பலாத்காரம் செய்து கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த தண்ணீர் பள்ளம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் ஆடுகளை வளர்த்து வருகிறார்.

 

இவர் நேற்று வழக்கம் போல் அருகில் உள்ள வனப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது மர்ம நபர் ஒருவர் அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

இதுகுறித்து தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நடைபெற்ற பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் விசாரணை நடத்தினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon