80,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல்..!

த்திரபிரதேசத்தில் 70,000 கோடி ரூபாய் மதிப்பிலான 1406 திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்ட உள்ளார். உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் இன்று முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று 1504 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

 

விவசாயம் மற்றும் அதன் துணை தொழில்களில் 275 திட்டங்களுக்கும், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட 25 திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

 

கல்வித்துறையில் ஆயிரத்து 483 கோடி ரூபாய் மதிப்பில் 6 திட்டங்களும், 489 கோடி ரூபாய் முதலீட்டில் பால் பண்ணைத் திட்டங்கள் மற்றும் 224 கோடி ரூபாயில் 6 கால்நடை வளர்ப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. துவக்கப்படும் திட்டங்கள் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது