குக் வித் கோமாளி 3 இந்த வார எலிமினேஷன் இவர்தான்..!

குக் வித் கோமாளி மூன்றாம் சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வாரத்திற்கான ப்ரோமோ வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. கோமாளிகள் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கெட்டப்பில் தான் செட்டுக்கு வந்திருக்கிறார்கள்.

 

இது வரை குக் வித் கோமாளி 3ல் எலிமினேஷன் சுற்றுக்கு வந்ததே இல்லை என சொல்லும் அளவுக்கு இருக்கும் கிரேஸ் மற்றும் வித்யூலேகா ஆகியோர் கண்டிப்பாக எலிமினேஷன் ரவுண்டுக்கு வர வேண்டும் என மணிமேகலை ஷோ தொடக்கத்திலேயே கூறினார்.

 

அதே போலவே இறுதியில் நடந்துவிட்டது. கிரேஸ் மற்றும் வித்யுலேகா இருவரும் எலிமினேஷன் ரவுண்டில் நிற்க, அவர்கள் இருவரில் ஒருவர் வெளியேறி ஆக வேண்டும் என நடுவர்கள் கூறுகின்றனர்.

 

அதன் பின் வித்யூலேகாவுக்கு நடுவர் கைகொடுக்கிறார், கிரேஸ் சிரித்த முகத்தோடு இருக்கிறார். அதனால் வித்யூலேகா தான் எலிமினேஷன் என தெரிகிறது.