ரோட்டில் கிழித்து எறியப்பட்ட பள்ளி புத்தகங்கள்..!
உளுந்தூர்பேட்டையில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த மாணவர்கள் புத்தகங்களைக் கிழித்து சாலையில் வீசி எறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவடையும் நிலையில் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்தனர்.
தேர்வு முடிந்தவுடன் மாணவர்கள் தங்கள் கைகளில் வைத்திருந்த புத்தகங்களை கிழித்து வீசியுள்ளனர். அவர்களின் செயலை கண்டு சாலையில் சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





