உலகில் நீளமான கண்ணாடி பாலம் திறப்பு..!
உலகின் மிக நீளமான கண்ணாடி பாலம் வியட்நாமில் திறக்கப்பட்டுள்ளது. வியட்நாமில் உள்ள ஒரு பகுதியில் இரண்டு மலைகளுக்கு இடையே இந்த கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 492 அடி உயரத்தில் உள்ள இந்த கண்ணாடி பாலத்தின் நீளம் 632 மீட்டர் ஆகும்.
இந்த பாலத்தில் உள்ள கண்ணாடிகள் 40 மில்லி மீட்டர் தடிமனில் உடையாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே நாளில் 450 பேர் நடக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
அப்பொழுது பாலத்தில் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடைபெற்றது. வியட்நாமில் திறக்கப்பட்டுள்ள இந்த பாலம் உலகின் மிக நீளமான கண்ணாடி பாலம் என்ற கின்னஸ் சாதனையையும் பெற்றுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





