--- --:--:-- --

ரேஷன் கடைகளில் கைரேகைக்கு பதில் கருவிழி பதிவு..!

8

ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க கண் கருவிழி கருவி மக்களுக்கு பயன் தரும் வகையில் இருந்தால் தமிழகம் முழுவதும் கொண்டு வரப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

 

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கைரேகை சரியாக பதிவு செய்ய முடியவில்லை என்றும் பயோமெட்ரிக்கில் சரியாக பொருட்களை வழங்க முடியவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்ததால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கண் கருவிழியின் மூலமாக பொருட்களை வாங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon