--- --:--:-- --

பெண் சிசுக்களை கருவிலேயே கண்டறிந்து அழித்து வந்த கொடூர கும்பல்.!

1

தர்மபுரி அருகே ஸ்கேன் கருவி மூலம் பெண் சிசுக்களை கருவிலேயே கண்டறிந்து அழித்து வந்த ஏழு பேர் கொண்ட கொடூர கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. ராஜா பேட்டை ஏரிக்கரை அருகே ஒரு கும்பல் சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபடுவதாக கிடைத்த புகாரின் பேரில் போலீசார் அங்கு சென்றனர்.

 

வெங்கடேஷ் என்பவரது வீட்டின் பின்பக்கம் ரகசிய இடத்தில் சிறிய அளவிலான ஸ்கேன் எந்திரத்தை வைத்து மூன்று பெண்கள் 3 ஆண்கள் அடங்கிய கும்பல் ஈடுபட்டது தெரியவந்தது. வெங்கடேசன் உட்பட 7 பேரை கைது செய்த போலீசார் எந்திரங்களை பறிமுதல் செய்தனர்.

 

சரிதா என்ற பெண் கர்ப்பிணிகளை அழைத்து வரும் இடைத்தரகராகவும், கற்பகம் என்றபின் ஸ்கேன் இயந்திரத்தை கையாள்பவர் ஆகவும் செயல்பட்டுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon