--- --:--:-- --

தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்ட பேருந்து..!

1

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சரபங்கா ஆற்றில் கல்லூரி பேருந்து சிக்கியது. பூசாரி பட்டியில் செயல்படும் தனியார் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதற்காக மாணவர்களை அழைத்து வர கல்லூரி பேருந்து சென்றுள்ளது.

 

கருப்பூருக்கும், சக்கரை செட்டியப்பட்டிக்கும் இடையே பாலம் வழியாக பேருந்து சென்று கொண்டிருந்தது. ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்து செல்வதால் கல்லூரி பேருந்தின் ஓட்டுநர் ஆற்றைக் கடந்து அக்கரைக்குச் செல்ல முயன்றுள்ளார்.

 

ஆனால் திடீரென ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து பேருந்து தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டது. அங்கிருந்தவர்கள் பேருந்து ஓட்டுனரை பத்திரமாக மீட்டனர். அதனை தொடர்ந்து டிராக்டர் மூலம் பேருந்து பத்திரமாக மீட்கப்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon